6 ரன்களில் அவுட்டான தோனி.. காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
6 ரன்களில் அவுட்டான தோனி.. காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்
Published on

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 30 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இறுதி கட்டத்தில் அபாயகரமான பேட்ஸ்மேனான தோனி ஆட்டமிழந்ததும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கைதட்டி ஆரவாரம் செய்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com