ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கிய கேரள கிரிக்கெட் சங்கம்

அவர் மீதான தடையை நீக்க ஒருமனதாக கேரள கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது.
ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கிய கேரள கிரிக்கெட் சங்கம்
Published on

சென்னை,

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் சமூக ஊடகங்களில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஸ்ரீசாந்த்துக்கு 3 ஆண்டு தடை விதித்து கேரள கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.இந்த தடையை எதிர்த்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது

இதையடுத்து, கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக, தான் வெளியிட்ட கருத்துகளுக்காக வருத்தம் தெரிவித்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதத்தை ஸ்ரீசாந்த் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசாந்த் நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர் மீதான தடையை நீக்க ஒருமனதாக கேரள கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com