கே.எல்.ராகுல், நிதிஷ் ராணா அதிரடி... பஞ்சாப்புக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி

கே.எல்.ராகுல் 150 ரன்களை கடந்து ஐபிஎல்லில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.
கே.எல்.ராகுல், நிதிஷ் ராணா அதிரடி... பஞ்சாப்புக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி
Published on

புது டெல்லி,

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 25) மதியம் நடைபெற்று வரும் 35-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிரடி தொடக்கம் கொடுத்தார். ஆனால், மறுபுரம் நின்ற பதும் நிசாங்கா 11(7) ரன்களில் அவுட்டானார். பின்னர் ராகுலுடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கே.எல்.ராகுல் 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து நிதிஷ் ராணா 29 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

பின்னர் வேகத்தை கூட்டிய இந்த ஜோடி பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சர் செய்தது. கே.எல்.ராகுல் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 16-வது ஓவரிலேயே 200 ரன்களை டெல்லி கடந்தது. மறுபுறம் அதிரடி காட்டிய நிதிஷ் ராணா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்நிலையில், 91(44) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 150 ரன்களை கடந்து ஐபிஎல்லில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி 264 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் மற்றும் சேவியர் பார்ட்லெட் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com