இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமனம்

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இலங்கை அணி பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து மலிங்கா கூறுகையில், "எங்களிடம் மிகவும் திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களிடம் எனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com