

விந்தோக்,
3வது ஒருநாள் போட்டியில் நமீபியா 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 போட்டிகளிலும் நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இந்நிலையில், நமீபியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விந்தோக்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நமீபியா தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ரன்களுக்கு 156 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் செனி கிரீன் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாட உள்ளது.