கடைசி ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு

மழை காரணமாக போட்டி தொடங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு
Published on: 

கேப்டவுன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

கடைசி ஒருநாள் போட்டி

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. போட்செப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.

டாஸ்

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மழை காரணமாக போட்டி தொடங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com