கடைசி டி20: அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

முதல் டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி பெற்றது.
இந்தியா, அயர்லாந்து
Published on

பெல்பாஸ்ட்

அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அதிர்ச்சி அளித்தது.

கடைசி டி20 போட்டி

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. போட்டி, இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்கிறது.

போட்டியில் விளையாடும் அணிகள் விவரம் வெளியாகி உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு:

அணிகள் விவரம்

அயர்லாந்து: டிம் டெக்டர், ராஸ் அடேர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் (கேப்டன்), பெஞ்சமின் காலிட்ஸ், கரெத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், லியாம் மெக்கார்த்தி, மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜெய் மூந்திரா, மேத்யூ ஹொல்லார்ட்

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், அக்சர் பட்டேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்

X

Daily Thanthi
www.dailythanthi.com