லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: விளையாட மறுத்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பாகிஸ்தான்


லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: விளையாட மறுத்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பாகிஸ்தான்
x

அரையிறுதியில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

பர்மிங்காம்,

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

அதன்படி, முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது. இதன் காரணமாக போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாகிஸ்தான் அணி விளையாடாமலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி போட்டி இன்றிரவு நடைபெற உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியிலும் இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாட மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story