

அல் அமீரத்:
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாகின் மகனான ஆர்யவீர் சேவாக் (Aaryavir Sehwag), 2026 யு-19 ஆசிய கோப்பைத் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஓமனில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த நேபாள அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 42.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் தர்ஷ் சோனர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆர்யவீர், 52 பந்துகளில் 70 ரன்கள் (7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 129 ரன்கள் என்ற இலக்கை 19.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எளிதாக எட்டியது.
இதையடுத்து சேவாகைப் போலவே அதிரடியாக விளையாடிய ஆர்யவீரின் இந்த ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
இந்த தொடரில் தனது முதலாவது போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்திய யு-19 அணி தனது அடுத்த போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.