4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற வியூகம் தவறல்ல - லிட்டன் தாஸ்

ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடுவது தவறான முடிவு கிடையாது.

4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற வியூகம் தவறல்ல - லிட்டன் தாஸ்
Published on: 

வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என 4 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் சான்டோ எடுத்த இந்த முடிவு வங்காளதேச கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் வங்காளதேச அணி, இந்த முறை 4 பேருடன் களமிறங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும், அறிமுக வீரர் மஹ்பிஜுல் இஸ்லாமுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் அணியில் சேர்க்கப்படவில்லை.

வங்காளதேச அணி

இந்நிலையில், வங்காளதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ், 4 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடுவது தவறான முடிவு கிடையாது. குறிப்பாக சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது . அவர் தனது பந்துவீச்சில் ரன்களை கட்டுப்படுத்தியிருந்தால் தென்ஆப்பிரிக்க அணிக்கு கூடுதல் நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஒரு வீரருக்கு மோசமான நாள் அமையலாம் மிராஸ் மீண்டும் சிறப்பாக செயல்படுவார்.

இந்தப் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி 179 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இதில் 14 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் மார்கஸ் அக்கர்மேன் 157 ரன்கள் விளாசினார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி 113 ரன்கள் மட்டுமே பின்தங்கியிருக்கிறது.

X