டி20 போட்டி ‍- குஜராத் பந்துவீச்சை சிதறடித்த கமலினி... 57 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்

சீனியர் பெண்கள் டி20 கோப்பைக்கான போட்டியில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் மோதின.
கமலினி
Published on: 

லக்னோ,

பெண்களுக்கான உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் தமிழக வீராங்கனை ஜி. கமலினி சதம் விளாசி அசத்தியுள்ளார்.

சதம் அடித்த கமலினி

லக்னோவில் நடைபெற்ற சீனியர் பெண்கள் டி20 கோப்பைக்கான போட்டியில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக ஜி. கமலினி, தயாளன் ஹேமலதா களமிறங்கினர்.

ஹேமலதா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த சுபாஹரினி 3 ரன்களிலும், ஸ்ரீநிதி 1 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய கமலினி, குஜராத் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.

மொத்தம் 59 பந்துகளைச் சந்தித்த அவர், 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் விளாசினார். கமலினியின் அதிரடியால் தமிழக அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

தமிழக அணி வெற்றி

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியால் தமிழக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் தமிழக அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

X