பா.ஜனதாவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியா..? மவுனம் கலைத்த யுவராஜ் சிங்

பா.ஜனதாவில் இணைந்து வரும் மக்களவை தேர்தலில் யுவராஜ் சிங் பஞ்சாப்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், பா.ஜனதாவில் இணைந்து வரும் மக்களவை தேர்தலில் பஞ்சாப்பில் பேட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன்படி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தெகுதியில் யுவராஜ் சிங் பேட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது தெடர்பாக யுவராஜ் சிங், தனது மவுனத்தை கலைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது. நான் குர்தாஸ்பூர் தெகுதியில் பேட்டியிடவில்லை. எனது ஆர்வம் என்பது வேறு விதமாக உள்ளது. பல்வேறு திறமைகளை கெண்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும், உதவுவதிலும் தான் உள்ளது. எனது YOUWECAN அறக்கட்டளையின் மூலம் அதனை தெடர்ந்து செய்வேன்" என்று அதில் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் வரவேற்று கெண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com