ஆவேஷ் கான், ஹசரங்கா அவுட்... லக்னோ அணியில் 7 வீரர்கள் விடுவிப்பு

மினி ஏலத்தில் புதிய வீரர்களைத் தேர்வு செய்ய லக்னோ அணி தயாராகி உள்ளது.
ஆவேஷ் கான், ஹசரங்கா அவுட்... லக்னோ அணியில் 7 வீரர்கள் விடுவிப்பு
Published on: 

லக்னோ,

ஐ.பி.எல். 2027 தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 வீரர்களை விடுவித்துள்ளது.

7 வீரர்களுக்கு நன்றி தெரிவித்த லக்னோ

ஆவேஷ் கான், வனிந்து ஹசரங்கா, ஹிம்மத் சிங், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நமன் திவாரி, அன்ரிச் நார்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே ஆகிய 7 வீரர்களை லக்னோ அணி விடுவித்துள்ளது.

ஏற்கெனவே முகமது ஷமி, மணிமாறன் சித்தார்த் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 7 வீரர்களை லக்னோ அணி விடுவித்துள்ளது.

இதன் மூலம் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ள மினி ஏலத்தில் புதிய வீரர்களைத் தேர்வு செய்ய லக்னோ அணி தயாராகி உள்ளது.

X