உ.பி. முதல்-மந்திரியை சந்தித்து வாழ்த்து பெற்ற லக்னோ அணியினர்

லக்னோ அணியினர் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
உ.பி. முதல்-மந்திரியை சந்தித்து வாழ்த்து பெற்ற லக்னோ அணியினர்
Published on

லக்னோ,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில்,  ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி வீரர்கள் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com