அயோத்தி கோவிலில் லக்னோ அணி வீரர்கள் சாமி தரிசனம்

10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
அயோத்தி கோவிலில் லக்னோ அணி  வீரர்கள் சாமி தரிசனம்
Published on

லக்னோ,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் லக்னோ அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவும் வீரர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com