ஐதராபாத் அணியை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி

5 விக்கெட் வித்தியாசத்தில் 160 ரன்கள் எடுத்து இலக்கை கடந்து லக்னோ வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணியை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி
Published on

ஐதராபாத்,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்தித்தது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஓவரில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.பின்னர் டிராவிஸ் ஹெட் 7 ரன்னில் அவுட்டானார்.அடுத்து இறங்கிய கேப்டன் இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து லிவிங்ஸ்டன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதிஸ் ரெடி , கிளாசான் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து லிவிங்ஸ்டன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதிஸ் ரெடி , கிளாசான் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தனர்.

இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் ஷமி , அவேஸ் கான் , பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

லக்னோ அணியில் மிட்சல் மார்சல் 14 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடி மார்க்ரம் 45 ரன்கள் எடுத்தார்.

களமிறங்கிய ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மறுபுறம் ரிஷப் பண்ட் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று அரைசதம் கடந்து 68 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 160 ரன்கள் எடுத்து இலக்கை கடந்து லக்னோ வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com