பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த டெல்லி வீரர் லுங்கி இங்கிடி; மருத்துவமனையில் அனுமதி

டெல்லி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த டெல்லி வீரர் லுங்கி இங்கிடி; மருத்துவமனையில் அனுமதி
Published on

டெல்லி,

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 35வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் வீரர்கள் பிரப்சிம்ரன் சிங், பிரயான்ஷ் ஆர்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி பந்து வீச்சின்போது 3வது ஓவரை கேப்டன் அக்சர் பட்டேல் வீசினார். 2.3 ஓவரின்போது பஞ்சாப் வீரர் பிரயான்ஷ் ஆர்யா அடித்த பந்து கேட்ச் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. டெல்லி வீரர் லுங்கி இங்கிடி அந்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், கேட்ச் பிடிக்கும் முயற்சியின்போது நிலைதடுமாறிய லுங்கி இங்கிடி கீழே விழுந்தார். அப்போது லுங்கி இங்கிடியின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டது. பின்னர், லுங்கி இங்கிடி ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லுங்கி இங்கிடி தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com