மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை கேட்டி மாக் 55 பந்துகளில் 67 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்
Published on

ஆஸ்திரேலியா

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற 39 வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான பெண்கள் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 142 ரன்கள் குவித்தது.அந்த அணியின் தரப்பில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை கேட்டி மாக் 55 பந்துகளில் 67 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவருடன் சேர்ந்து அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டன் மெக்கார்த் 30 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.

இறுதியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 148 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி புள்ளி பட்டியலில் 4 வாத்து இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com