சூர்யகுமார், சிவம் துபேவுக்கு மராட்டிய முதல்-மந்திரி பாராட்டு

சொந்த ஊர்களுக்கும் திரும்பும் நிலையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
சூர்யகுமார், சிவம் துபேவுக்கு மராட்டிய முதல்-மந்திரி பாராட்டு
Published on

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தலைமையி லான இந்திய அணி மகுடம் சூடியது. கோப்பை வென்ற இந்திய வீரர்கள் சொந்த ஊர்களுக்கும் திரும்பும் நிலையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே மராட்டிய மாநிலத்துக்கு திரும்பினர்.


சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோரை, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார். இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தேவேந்திர பட்னாவிஸ் கோப்பை வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com