அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சாதனை படைத்த மானவ் சுதர்

டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சாதனை படைத்த மானவ் சுதர்
Published on

நியூ சண்டிகார்,

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அறிமுக பவுலராக கால்பதித்த ராஜஸ்தானை சேர்ந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் முதல் இன் னிங்சில் 22 ஓவர்களில் 10 மெய்டனுடன் 33 ரன்கள் மட்டுமே வழங்கி 6 விக் கெட்டுகளை கபளீகரம் செய்தார்.

டெஸ்டில் இந்திய புதுமுக பவுலரின் 3-வது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். ஏற்கனவே 1988-ம் ஆண்டு சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் நரேந்திர ஹர்வானி அறிமுக வீரராக இறங்கி முதல் இன்னிங்சில் 61 ரன்னுக்கு 8 விக் கெட், 2-வது இன்னிங்சில் 75 ரன்னுக்கு 8 விக்கெட் என வீழ்த்தியதே இச்சா தனை பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளது.

இந்த டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அறிமுக டெஸ்டிலேயே ஆட்டநாயகன் விருதை பெற்ற 9-வது இந்தியர் ஆவார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com