10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்

மணிப்பூர் பவுலர் ஒருவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்
Published on

அனந்தபுர்,

ஆந்திராவின் அனந்தபுரில் நடந்த கூச் பெஹார் கோப்பைக்கான (19 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) அருணாச்சலபிரதேசத்துக்கு எதிராக மணிப்பூர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் புதிய சாதனை படைத்தார். அவர் 2-வது இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பிரமிக்க வைத்தார். 9.5 ஓவர்கள் பந்து வீசி 6 மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்த 10 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இதில் 5 வீரர்களை கிளன் போல்டு ஆக்கினார். 2 வீரர்கள் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். 3 பேர் கேட்ச் முறையில் வெளியேறினர். இதனால் 2-வது இன்னிங்சில் அருணாச்சலபிரதேச அணி வெறும் 36 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 53 ரன்கள் இலக்கை மணிப்பூர் அணி விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது. 18 வயதான ரெக்ஸ் ராஜ்குமார், இந்த சீசனில் ரஞ்சி கிரிக்கெட்டில் மணிப்பூர் அணிக்காக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.


Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com