ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்...பந்தை பிடிக்கும்போது ஸ்டம்பில் விழுந்த மெண்டிஸ் - வைரலாகும் வீடியோ...!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின.
Image Courtesy: Twitter 
Image Courtesy: Twitter 
Published on

புனே,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்களே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிசாங்கா 46 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆடியது.

ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக ஆடி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 242 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பீல்டிங் செய்யும்போது பீல்டர் எறிந்த பந்தை இலங்கை விக்கெட் கீப்பரான குசல் மெண்டிஸ் பிடிக்க முயன்றார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக ஸ்டம்பில் விழுந்தார். இதன் காரணமாக நிலை தடுமாறிய மெண்டிஸ் கீழே விழுந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com