பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர்: சிட்னி தண்டர்ஸ் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர்: சிட்னி தண்டர்ஸ் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி
Published on

ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி 20 வர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ராஸ் 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.

152 ரன்கள் இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது.அந்த அணியில் கிளென் மேக்ஸ்வெல் 25 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரசல் 21 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com