அமெரிக்க கிரிக்கெட்டில் புதிய சிக்ஸர் மன்னன்... வரலாறு படைத்த மிலிந்த் குமார்

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 போட்டியில் அமெரிக்க - யுஏஇ அணிகள் மோதின.
மிலிந்த் குமார்
Published on: 

டல்லாஸ்,

ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக்-2 தொடரில் அமெரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

மிலிந்த் குமாரின் அதிரடி சதம்

டல்லாஸில் நேற்று நடைபெற்ற ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 போட்டியில் அமெரிக்க - யுஏஇ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது.

இதையடுத்து இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு மிலிந்த் குமார் அபாரமாக ஆடினார். வெறும் 84 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5-வது சதத்தையும் பதிவு செய்தார்.இதன் மூலம் 330 ரன்கள் என்ற இலக்கை அமெரிக்கா அணி 48.5 ஓவர்களில் எட்டியது.

அமெரிக்க அணிக்காக அதிக சிக்ஸர்கள்

இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் மிலிந்த் குமார், அமெரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

மிலிந்த் குமார் – 38 சிக்ஸர்கள்

மோனங்க் படேல் – 34 சிக்ஸர்கள்

ஆரோன் ஜோன்ஸ் – 32 சிக்ஸர்கள்

சாய் தேஜா முக்காமல்லா – 28 சிக்ஸர்கள்

ஸ்டீவன் கெய்லர் – 27 சிக்ஸர்கள்

X

Daily Thanthi
www.dailythanthi.com