பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக மிதாலி ராஜ் நியமனம்

பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் பங்கேற்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம் AFP
கோப்புப்படம் AFP
Published on

மும்பை,

ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கி உள்ளது. தற்போது இந்த அணியின் ஆலோசகராக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com