தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி... "இந்திய அணியில் இந்த மாற்றம் தேவை, இல்லனா..." - மிதாலி ராஜ்

இந்திய அணி அடுத்த இரண்டு லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை எதிர்கொள்கிறது.
தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி... "இந்திய அணியில் இந்த மாற்றம் தேவை, இல்லனா..." - மிதாலி ராஜ்
Published on

சென்னை,

தென் ஆப்பிரிக்காவுடனான தோல்விக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா வெற்றி

159 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் டஸ்மின் பிரிட்ஸ் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அந்த அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு இது முதல் தோல்வியாகும். இருப்பினும் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு சற்று சிக்கலாகியுள்ளது.

ஹர்மன்பிரீத் 4-வது இடம்

இந்நிலையில், தோல்விக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

"இந்த தோல்வி ஏமாற்றமளிக்கிறது. இந்தப் போட்டியில் வென்றிருந்தால் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றிருக்கும். ஆனால் தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவை கட்டாயம் வீழ்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் 5-வது இடத்தில் களமிறங்காமல் 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5-வது இடத்தில் விளையாடலாம்," என்றார்.

கட்டாய வெற்றி

இந்திய அணி தனது அடுத்த இரண்டு லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com