விராட் கோலி ஆட்டமிழந்ததை என்னால் நம்பமுடியவில்லை: முகம்மது கைப்

விராட் கோலியின் பேட்டிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் விமர்சனம் செய்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அகமதாபாத்,

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் கோலி ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்றைய போட்டியில் ஒடியன் ஸ்மித் பந்தை ஆட முயன்ற போது கோலி ஆட்டமிழந்த விதம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் விமர்சித்துள்ளார்.

இரண்டாவது போட்டியில், விராட் கோலியின் கால் சரியான நேரத்தில் முன்னோக்கி வரவில்லை. கோலி தனது உச்சக் கட்ட பார்மில் இருந்த போது இது போன்ற பந்தை எல்லைக்கு அடித்திருப்பார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி பின்தங்கி இருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று முகம்மது கைப் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com