6-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர்... 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த ஷமி

துலீப் டிரோபி அரையிறுதிப் போட்டியில் ஷமி இந்த சாதனையை படைத்தார்.
முகமது ஷமி
Published on

பெங்களூரு,

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உள்நாட்டு கிரிக்கெட்டில் அரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

2 விக்கெட்டுகள்

பெங்களூருவில் துலீப் டிரோபி அரையிறுதிப் போட்டியில் மத்திய மண்டல - கிழக்கு மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் கிழக்கு மண்டல அணியின் ஷமி 16 ஓவர்கள் பந்துவீசி யாஷ் ரத்தோர் மற்றும் அர்ஷத் கான் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் அர்ஷத் கானின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல்தர, லிஸ்ட்-ஏ மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வடிவங்களையும் சேர்த்து தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் 900 விக்கெட்டுகளை ஷமி நிறைவு செய்தார்.

6-வது பந்து வீச்சாளர்

இதன் மூலம் தொழில்முறை கிரிக்கெட்டில் 900 விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

266 ரன்களுக்கு ஆல்-அவுட்

மத்திய மண்டல அணியின் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டல அணி சிறப்பாக பந்துவீசி, அந்த அணியை 266 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தது. தற்போது கிழக்கு மண்டல அணி 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களுடன் விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com