

சென்னை,
2026 துலீப் டிராபி தொடரில் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடிய அனுபவமிக்க 9 வீரர்கள் பல்வேறு மண்டல அணிகளுக்காக களமிறங்க உள்ளனர்.
2024-ம் ஆண்டு இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரஜத் படிதார், இந்த தொடரில் மத்திய மண்டல அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
2023-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன், கிழக்கு மண்டல அணியை வழிநடத்த உள்ளார். அவருடன், இந்தியாவுக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய முகேஷ் குமார் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மேற்கு மண்டல அணியில், இந்தியாவின் டெஸ்ட் அனுபவமிக்க மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
13 டெஸ்ட் போட்டிகளில் 377 ரன்கள் மற்றும் 33 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஷர்துல் தாகூர், 6 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய சர்பராஸ் கான், டெஸ்ட் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த பிருத்வி ஷா ஆகியோர் அணியில் உள்ளனர்
இந்திய டெஸ்ட் வரலாற்றில் முச்சதம் அடித்த இரு வீரர்களில் ஒருவரான கருண் நாயர், தெற்கு மண்டல அணிக்காக களமிறங்குகிறார். 1
கடந்த ஆண்டு (2025) இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ், வடக்கு மண்டல அணிக்காக விளையாடுகிறார்.