முகமது சிராஜ், ஜடேஜா நீக்கம் கடுமையானது - அஸ்வின் விமர்சனம்

இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது பற்றி முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பி உள்ளனர்.
முகமது சிராஜ், ஜடேஜா நீக்கம் கடுமையானது - அஸ்வின் விமர்சனம்
Published on: 

முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா இடம் பெறாதது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் விமர்சித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறாதது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்த நீக்கம் மிகவும் கடுமையானது. ஆனால் இது தான் புதிய இயல்பு நிலை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முகமது சிராஜ் இடம்பெறாதது பற்றி முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், ரவிசாஸ்திரி ஆகியோரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.“சிராஜின் அனுபவம் மற்றும் பந்து வீச்சு திறனை கருத்தில் கொண்டு அவரை ஆடும் லெவனில் சேர்த்து இருக்க வேண்டும்” என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

“நன்றாக பந்து வீசக்கூடிய சிராஜ் இல்லாதது குழப்பமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது” என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

X