

லக்னோ,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதி வருகிறது. இந்த ஆட்டத்திற்கான் டாஸை வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆடியது.
தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் டிம் சைபர்ட் களமிறங்கினர். இதில், சைபர்ட் 0(3) ரன்களிலும் ரஹானே 10(15) ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து வந்த அன்குஷ் ரகுவன்சி 9(8) ரோவ்மன் பவல் 1(4) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த கேமரூன் கிரீன் - ரிங்கு சிங் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்போது 35(21) ரன்கள் அடித்தநிலையில், கேமரூன் கிரீன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த அனுகுல் ராய் 0(1) ரன் அடிக்காமல் வெளியேற ரமந்தீப் சிங் களமிறங்கினார். அவரும் 6(11) ரன்களில் அவுட்டானார். பின்னர் ரிங்கு சிங்குடன் சுனில் நரைன் ஜோடி சேர்ந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழ மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரிங்கு சிங் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரிங்கு சிங் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 83 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மோசின் கான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ களமிறங்க உள்ளது.