சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட்: ரஷித் கான் புதிய சாதனை

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கிங்ஸ்டவுன்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. அத்துடன் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இன்று நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷித் கான் நிகழ்த்தி உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ரஷித் கான் இதுவரை 9 முறை 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இந்தப் பட்டியலில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 2வது இடத்திலும் (8 முறை), உகாண்டா வீரர் ஹென்றி சென்யாண்டோ 3வது இடத்திலும் (7 முறை) உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com