

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணய்க்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் அடித்தது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவரில் 194 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டி பிடித்தது பெங்களூர் அணியின் விராட் கோலி 104 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி , ஜோஸ் பட்லர் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் சேசிங்கில் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் பெற்றுள்ள நிலையில் அதனை விராட் கோலி தற்போது சமன் செய்துள்ளார். விராட் கோலி சேசிங்கில் அடிக்கும் 3 வது சதம் இதுவாகும்.