பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்டுகள்... வரலாறு படைத்த அர்ஷ்தீப் சிங்

ஐ.பி.எல். தொடரில் அர்ஷ்தீப் சிங் இதுவரை 86 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது டிம் டேவிட்-க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் அவரது விக்கெட் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது. ஐ.பி.எல். தொடரில் அறிமுகமானது முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங் இதுவரை 72 போட்டிகளில் ஆடி 86 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

இதன் மூலம் அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அர்ஷ்தீப் சிங் (86 விக்கெட்) படைத்துள்ளார்.

பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:

அர்ஷ்தீப் சிங் - 86 * விக்கெட்

பியூஷ் சாவ்லா - 84 விக்கெட்

அக்சர் படேல் - 61 விக்கெட்

முகமது ஷமி - 58 விக்கெட்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com