தோனி மற்றும் ஹர்தீக் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்ட வேடிக்கையான தருணம்

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி மற்றும் ஹர்தீக் வேடிக்கையான முறையில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
தோனி மற்றும் ஹர்தீக் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்ட வேடிக்கையான தருணம்
Published on

மும்பை,

இந்தி திரையுலகில் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது மனைவி சாக்ஷியுடன் இதில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மற்றொரு கிரிக்கெட் வீரரான ஹர்தீக்கும் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் தோனி, சாக்ஷி மற்றும் ஹர்தீக் ஆகியோர் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். திடீரென சாக்ஷி சிரித்து கொண்டே புகைப்படம் எடுப்பதில் இருந்து விலகி திரைக்கு பின்னால் சென்று விட்டார். அவர் சென்றபின் தொடர்ந்து தோனியும், ஹர்தீக்கும் புகைப்படம் எடுத்தனர்.

அதன்பின் தோனியின் தோள் மேல் ஹர்தீக், கை போடுகிறார். அவரை கையை எடுக்கும்படி தோனி கேட்டு கொள்கிறார். ஆனால் தொடர்ந்து இருவரும் நிற்பது போன்று புகைப்படம் எடுத்து கொண்டனர். சாக்ஷியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் தோனி மற்றும் ஹர்தீக் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் 2வது முறையாக இதுபோன்று புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com