“இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல்லா?”- வைரலாகும் சிஎஸ்கே முன்னாள் வீரரின் கருத்து

தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2008 முதல் 2023 வரை வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை வென்றுக் கொடுத்துள்ளார்.
“இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல்லா?”- வைரலாகும் சிஎஸ்கே முன்னாள் வீரரின் கருத்து
Published on

சென்னை,

ஐபிஎல் 2026 தொடர் வருகிற 28-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. தோனி தனது 19வது தொடர்ச்சியான ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த ஐபிஎல் தொடருக்கான தயாரிப்பில் தோனி ஈடுபட்டு வரும் நிலையில், அவரது ஓய்வு குறித்து இந்திய முன்னாள் வீரரும் முன்னாள் சிஎஸ்கே-வின் வீரருமான இர்பான் பதான் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இர்பான் பதான் ஒரு விவாத நிகழ்ச்சியில் கூறியதாவது: “இந்த தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். சிஎஸ்கே அணியில் தோனி இல்லாமல் இருப்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை ” என்று அவர் கூறினார்.

தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து ரசிகர்களிடையே தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், பதானின் இந்த கருத்து தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2008 முதல் 2023 வரை வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை வென்றுக் கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com