முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி வெற்றி

மும்பை அணி 86 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி வெற்றி
Published on: 

19-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பை, இந்தூர், கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதன் 7-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.

தமிழக அணி

இந்தூரில் நடந்த 'பி' பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- சவுராஷ்டிரா அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த தமி ழக அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சன்னி சந்த் 44 ரன்னும் (17 பந்து. 6 சிக்சர்), ஆந்த்ரே சித்தார்த் 38 ரன்னும், பி.சச்சின் 37 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து 193 ரன் இலக்கை 14.3 ஓவருக்குள் விரட்டிப் பிடித்தால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியுடன் களம் கண்ட சவுராஷ்டிரா 16.4 ஓவர்களில் 154 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 38 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. தமிழகம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சன்னி சந்து 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும். குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆல்-ரவுண்டராக அசத்திய சன்னி சந்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சவுராஷ்டிரா அணி 3 தோல்வி, 4 வெற்றியுடன் 4-வது இடம் பெற்று நடையை கட்டியது. தமிழக அணி 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது. இந்த பிரிவில் டெல்லி, பஞ்சாப் அணிகள் 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 20 புள்ளிகளுடன் டாப்-2 இடங்களை பிடித்து சூப்பர் லீக் சுற்றை அடைந்தன. சூப்பர் லீக் சுற்று ஆட்டங்கள் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி வெற்றி

X