கம்பீர் உடனான உரையாடல் எனக்கு புதிய நம்பிக்கையை அளித்தது – நவீன் உல் ஹக்

கவுதம் கம்பீர் தன்னிடம் வந்து காயம் குறித்து விசாரித்ததாக நவீன் தெரிவித்துள்ளார்.

கம்பீர் உடனான உரையாடல் எனக்கு புதிய நம்பிக்கையை அளித்தது – நவீன் உல் ஹக்
Published on: 

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் நடத்திய உரையாடல் தனது காயத்திலிருந்து மீண்டு வருவது குறித்த பார்வையை மாற்றியதாகத் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த நவீன், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பு தொடரிலிருந்து விலகினார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்குப் பிறகு மைதானத்தில் தனியாக அமர்ந்திருந்தபோது, கவுதம் கம்பீர் தன்னிடம் வந்து காயம் குறித்து விசாரித்ததாக நவீன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கம்பீர் பயிற்சியாளராக இருந்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற 20 முதல் 25 நிமிட உரையாடல், காயத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து மீண்டு, மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதில் கவனம் செலுத்த உதவியதாக நவீன் கூறியுள்ளார்.

தனது தோள்பட்டை முழுமையாகக் குணமடைந்து உடற்தகுதி உறுதியாகும் வரை அவசரமாகக் களமிறங்கப் போவதில்லை.சர்வதேச கிரிக்கெட்டாக இருந்தாலும் லீக் போட்டிகளாக இருந்தாலும், முழு உடற்தகுதியுடன் திரும்புவதே தனது இலக்கு . காயத்தை நினைத்து வருத்தப்படுவதில் பயனில்லை. அதை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com