ஐபிஎல் - இந்த முறை மிஸ் ஆவாது... ''அதுதான் இலக்கு'' - ஸ்ரேயாஸ் ஐயர்

கடந்த ஆண்டு பஞ்சாப் அணி, பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ரன்னர்-அப் ஆனது.
ஐபிஎல் - இந்த முறை மிஸ் ஆவாது... ''அதுதான் இலக்கு'' - ஸ்ரேயாஸ் ஐயர்
Published on

சண்டிகர்,

ஐபிஎல் 2026 சீசன் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளநிலையில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வதுதான் இலக்கு என கூறி இருக்கிறார்.

அணியின் ஜெர்சி வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அது எனக்கு சவாலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். என் முழு கவனமும் கோப்பை மீதுதான்,” என்றார்.

Also Read
அயர்லாந்து டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகினார் பால் ஸ்டிர்லிங்
ஐபிஎல் - இந்த முறை மிஸ் ஆவாது... ''அதுதான் இலக்கு'' - ஸ்ரேயாஸ் ஐயர்

கடந்த ஆண்டு ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணி, பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ரன்னர்-அப் ஆனது.

ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் அணி, வருகிற 31-ம் தேதி நியூ சண்டிகரில் குஜராத் அணியை எதிர்கொண்டு தனது முதல் போட்டியை விளையாட உள்ளது. இந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com