ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார்? நமீபியா - அயர்லாந்து இன்று மோதல்

இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார்? நமீபியா - அயர்லாந்து இன்று மோதல்
Published on: 

விந்தோக்,

நமீபியா, அயர்லாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

நமீபியா - அயர்லாந்து

நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-2 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

கடைசி ஒருநாள் போட்டி

இந்நிலையில், நமீபியா, அயர்லாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. விந்தோக் நகரில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இப்போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது எந்த அணி? என்பதில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

X