

புதுடெல்லி,
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித் வென்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்துவீசிய நாதன் ஸ்மித் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி, நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி ஐசிசி ஜூன் மாதத்தின் சிறந்த வீரர் விருதை தட்டி சென்றுள்ளார்.
அதேப்போல், ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை, 2026 மகளிர் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை டானி வியாட்-ஹாட்ஜ் வென்றுள்ளார்.