’இங்கிலாந்துக்கு பட்லர் பண்ண மாதிரி இந்தியாவுக்கு யாராவது பண்ணிருக்கணும்’ - தோல்விக்கு பார்த்திவ் படேல் சொன்ன காரணம்

ஜோஸ் பட்லர் வெறும் 13 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பட்லர்
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, இங்கிலாந்து அணி இறுதி ஓவர்களில் வெளிப்படுத்திய அதிரடி பேட்டிங்தான் முக்கிய காரணம் என்று இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

ஜோஸ் பட்லர் அதிரடி

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. குறிப்பாக, கடைசி 5 ஓவர்களில் மட்டும் 82 ரன்கள் விளாசியது. இதில் ஜோஸ் பட்லர் வெறும் 13 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தோல்வி

அதனைத் தொடர்ந்து 388 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரையும் இழந்தது.

வெறித்தனமான ஆட்டம்

இந்தப் போட்டி குறித்து பேசிய பார்த்திவ் படேல், "388 ரன்கள் என்பது எளிதான இலக்கு அல்ல. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களும் விராட் கோலியும் சிறப்பாக இன்னிங்ஸை அமைத்தனர். ஆனால், இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் ஆடியதை போன்ற ஒரு வெறித்தனமான ஆட்டம் இந்திய அணியிடம் இல்லாததே வித்தியாசத்தை ஏற்படுத்தியது,"என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com