டி20 உலகக் கோப்பை - முதல் நேபாள வீரர்...வரலாறு படைத்த சோம்பால்

நேற்றைய லீக் போட்டியில் நேபாளத்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சோம்பால் காமி வரலாறு படைத்தார்.
டி20 உலகக் கோப்பை - முதல் நேபாள வீரர்...வரலாறு படைத்த சோம்பால்
Published on

காத்மாண்டு,

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் நேபாளத்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சோம்பால் காமி வரலாறு படைத்தார். 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 10 விக்கெட்டுகள் எடுத்த முதல் நேபாள பந்துவீச்சாளராக சோம்பால் காமி உருவெடுத்துள்ளார். 2014 உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் எடுத்திருந்த அவர், 2024 தொடரில் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

தற்போது நடந்து வரும் தொடரில் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் விக்கெட் எதையும் பெறாத காமி, ஸ்காட்லாந்துக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சு மூலம் தனது மைல்கல்லை எட்டினார். எனினும், நேபாள அணி ‘குரூப் சி’-ல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

ரோஹித் பௌடெல் தலைமையிலான நேபாள அணி, ஸ்காட்லாந்துக்கு எதிராக 171 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. 23 பந்துகளில் 50 ரன்கள் குவித்த தீபெந்திர சிங் ஐரீ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Also Read
டி20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
டி20 உலகக் கோப்பை - முதல் நேபாள வீரர்...வரலாறு படைத்த சோம்பால்

இதற்கு முன், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 185 ரன்கள் இலக்கை துரத்திய நேபாளம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும் இத்தாலி மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிகளிலும் தோல்வி கண்டது.

‘குரூப் சி’ இலிருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com