4 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில்... - மனம் திறந்த புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார், 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்காமல் இருந்தார்.
புவனேஸ்வர் குமார்
Published on: 

கிறைஸ்ட்சர்ச்,

4 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் இடம் பிடித்தது குறித்து புவனேஸ்வர் குமார் மனம் திறந்து பேசியுள்ளார்.

கம்பேக்

36 வயதான புவனேஸ்வர் குமார், 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்காமல் இருந்தார். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட காணொளியில் பேசிய அவர், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி வந்ததாக தெரிவித்தார்.

குடும்பத்தின் ஆதரவு முக்கியம்

தனது கம்பேக் பயணத்தில் குடும்பத்தினர் அளித்த ஆதரவு குறித்து பேசிய புவனேஸ்வர் குமார், இந்திய அணிக்குத் திரும்புவது குறித்து தங்களுக்குள் ஒருநாள்கூடப் பேசியதில்லை என்றார். இதுவே தனக்கு இருந்த மன அழுத்தத்தை குறைத்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக தனது உடற்தகுதி, பந்துவீச்சுத் திறன் மற்றும் மனதளவிலான தயாரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தியதாக தெரிவித்தார்.

முதல் டி20 போட்டியில் 49 ரன்கள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 49 ரன்களை விட்டுக்கொடுத்தார். இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 1 விக்கெட் வீழ்த்தி 50 ரன்களை விட்டுக்கொடுத்தார். இருப்பினும் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பியுள்ள புவனேஸ்வர் குமார், அடுத்தடுத்த போட்டிகளில் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com