வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமனம் - யார் தெரியுமா..?

வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரேக் பிராத்வெய்ட் விலகி உள்ளார்.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

கிங்ஸ்டன்,

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது சிறிய அணிகளை வீழ்த்த கூட முடியாமல் தடுமாறி வருகிறது. இதற்கு காரணம் அந்த கிரிக்கெட் வாரியத்திற்கும் முன்னணி வீரர்களுக்கு இடையே எழுந்த சம்பள பிரச்சனை மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனை எழுந்த உடன் முன்னணி வீரர்கள் சொந்த அணிக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

அதற்கு பதிலாக உலகெங்கிலும் நடைபெறும் டி2 லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டினர். தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் சேர்ந்து டி20 உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதன் பிறகு அந்த அணி தடுமாற்றங்களில் இருந்து மீண்டு வரும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக டெஸ்ட் கிரிக்கெட்அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த கிரேக் பிராத்வெய்ட் தற்போது அந்த பதவியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு புதிய கேப்டனாக ஷாய் ஹோப் செயல்படுவார் எனவும் அறிவிக்கபட்டுள்ளது. தற்போது டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோவ்மன் பவல் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவல் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவிக்க தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்பது வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com