ஐபிஎல் தொடரில் புதிய சாதனை

பெங்களூரு அணி 2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.


ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
Published on

அகமதாபாத்,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 இவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கி விளையாடியது.

தொடக்கம் முதல் பெங்களூரு வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

இதனால் 18ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.விராட் கோலி 75 ரன்கள் எடுத்தார்.இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு அணி 2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.


இந்த நிலையில் 2026 ஐபிஎல் தொடர் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 74 ஆட்டங்கள் நடந்த இந்த ஐ.பி.எல்.-ல் சாதனை எண்ணிக்கையாக 2,332 பவுண்டரிகளும், 1,426 சிக்சர்களும் பதிவாகின.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com