கோலியின் வெற்றிகளில் இருந்து இந்திய அணியை முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன்- ரோகித் சர்மா உருக்கம்

கோலியின் வெற்றிகளில் இருந்து இந்திய அணியை முன்னெடுத்து செல்ல விரும்புவதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கோலியின் வெற்றிகளில் இருந்து இந்திய அணியை முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன்- ரோகித் சர்மா உருக்கம்
Published on

மொகாலி,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த நிலையில் மொகாலியில் நிருபர்களை இன்று சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது :

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலிக்கு இது ஒரு அற்புதமான பயணம். கோலிக்கு இதை ஒரு மறக்க முடியாத சிறப்பு நிகழ்வாக மாற்ற விரும்புகிறோம்.

தற்போது இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல நிலையில் இருக்கிறது. அதற்கான புகழ் விராட் கோலியையே சேரும். அதற்காக அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

கோலியின் வெற்றிகளில் இருந்து இந்திய அணியை முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் முடிந்தவரை பல ஆட்டங்களில் வெற்றி பெற நாங்கள் முயற்சிப்போம்.

மீதமுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் நிச்சயமாக மிகவும் சவாலானதாக இருக்கும். ஆனால் எனக்கு தற்போது என்ன நடக்கவிருக்கிறது என்பதே முக்கியம். நிகழ்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற முயற்சிப்போம்.

இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com