நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ராப் வால்டர் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Image Courtesy: @ICC / @BLACKCAPS
Image Courtesy: @ICC / @BLACKCAPS
Published on

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார். கேரி ஸ்டீட்டின் பயிற்சியின் கீழ் நியூசிலாந்து அணி 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.

அதேசமயம் 2021ம் ஆண்டு முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக கேரி ஸ்டீட் கடந்த ஏப்ரம் மாதம் அறிவித்தார். 

இதையடுத்து நியூசிலாந்து அணி பயிற்சியாளர் இல்லாமல் கடந்த இரு மாதங்கள் இருந்தது. இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ராப் வால்டர் புதிய தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com