

அகமதாபாத்,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா , இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.