மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
மகளிர் கிரிக்கெட்:   நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
Published on

வெல்லிங்டன்,

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது.

இந்நிலையில், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

நியூசிலாந்தின் வெல்லிங்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com